Skip to main content

Posts

இதழோரம் புன்னகையாக

 நிஜம்தான் கொஞ்சம் உனக்காக  தவழ்ந்திருக்கிறேன் தவமாக  எப்போதும் அதை இனிமையாக  ஏமாற்றுவேன் ஒரு இதழோரம்  புன்னகையாக
Recent posts

உந்தன் மனம் போலே

  அடியோடு விழுகாமல் அரை கிளைகள் மரம்தானே பெரிதாக நினைக்காமல் ஒரு வானும் அழுகாதே பிறை இல்லை அதில் பிழையில்லை உந்தன் மனம் போலே

துறைமுகம்

கரை அதன் காதல்   கேளாமல் நங்கூரத்தை   கழற்றி விட்டு நகர்ந்தது  ஆழ் கடலுக்குள் பாய்  மரப்  படகு நங்கூரம்  இருக்கும் ந(நி )னைந்து  நிறம் மாறும் பொழுது  அனைத்தும் ஒரு கனவு  விடியலில் இன்னுமொரு  படகு 

நீலமாய் கடலொன்றை

விலக்கினால் விலகலாம் வலியெல்லாம் தாங்குமா உன் இதயம்தான் அதன் சுவர்களே வெளிப்பூச்சம்மா கனவுகள் களையலாம் கவிதைகள் நெருடுதே உயிர்வரை குழம்பினேன் தவறென்ன தவறினேன் தலையணை வெறுமையே தலைக்கணம் ஒதுக்கினேன் நீலமாய் கடலொன்றை நெஞ்சுக்குள்ளே காண்கிறேன் உயிர்வரை உவர்க்குதே உறக்கத்தில் உளறினேன் உன் தனிமையை கேட்டுத்தான் என் இளமையும் தவிக்குதே நடப்பதை ரசிகனாய் எனக்குள்ளே நடிக்கிறேன் நடனங்கள் இடைவெளி கடக்கையில் வியக்கிறேன்

வலது கண்ணாடி பிம்பம்

நானாக சிரித்தாலும் நயமாக நடந்தாலும் நிலவோடு நிற்கின்றேன் நில்லாமல் அலைகின்றேன் புது முல்லை வெள்ளை வயலோரம் பல தென்னை வழி நெடுக ஓடும் வாத்து வலது கண்ணாடி பிம்பம் வண்ணம் காட்டும் சாரல் சொல்லாமல் போனதெல்லாம் உன்னோடு மட்டுமில்லை என்னோடும் இடி மழையே அதை அவளோடு விட்டு வைத்தேன் கனவோடு காத்திருப்பேன் 

திங்கள் வரை

இதுகாளும் கதவுகளை திறந்து வைத்தேன் தென்றல் வீசியது திங்கள் வரை இப்போது வெள்ளி முளைக்க கொஞ்சம் மூடி வைத்தேன் அதனருகே நின்று கொண்டேன் தட்டும் ஒலி கேட்டால் திறந்து கொள்ளும் அடுத்த திங்கள் வரை

மின்மினி

நிலவோடு ஒரு நாளை கடக்காமல் விரியாது என் படுக்கை பகல்போல் வெளிச்சம் கண்டேன் பல காலம் நிறங்கள் கண்டேன் இடயிடையே இலக்கம் கண்டேன் ஒன்றுமொன்றுமாய் மயக்கம் கொண்டேன் கதவோடு மறையாதே சன்னல்கள் மறுக்காதே சேவலோடு கடைத் தெருவும் கூவி விட்டது உணர்ந்துவிட்டேன் உளரிவிட்டேன் உறவெல்லாம் ஒன்றாய் சேர்க்கும் உபாயம் கண்டு விட்டேன் கலாபம் ஏந்தி நிற்க்கும் கனாவில் விண்மீன்கள் நீந்தி போகும் மின்மினியாய் வேடிக்கை பார்த்தேன்